X

முடிந்தது ‘பத்து தல’ படப்பிடிப்பு – கேக் வெட்டி கொண்டாடிய சிலம்பரசன்

chekka chivantha vaanam trailer simbu images

சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து சிம்பு ‘பத்து தல’, ‘கொரோனா குமார்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். பத்து தல படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ போன்ற படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்குகிறார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான ‘முஃப்தி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது.

இந்நிலையில் ‘பத்து தல’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை சிம்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.