முக்கியமான போட்டி இங்கிலாந்தில் நடத்தக் கூடாது – கெவின் பீட்டர்சன் கருத்து

இந்தியா- நியூசிலாந்து அணிகள் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடி வருகின்றன. இங்கிலாந்து சவுத்தம்டன் இரண்டு அணிகளுக்கும் பொதுவான இடம் என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என கருதப்பட்டது.

ஆனால் முதல் நாள் மற்றும் இன்றைய 4-வது நாள் ஆட்டம் என இரண்டு நாட்கள் ஆட்டம் மழைக்காரணாக முழுவதுமாக கைவிடப்பட்டுள்ளன. ஒரு நாள் மட்டுமே ரிசர்வ் டே-ஆக உள்ளது. தற்போதைய நிலையில் போட்டி டிராவில் முடியவே அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு செய்தியை பதிவு செய்துள்ளார்.

அதில் “இதை சொல்வதற்கு எனக்கு வேதனை இருக்கிறது. நம்ப முடியாத முக்கியமான போட்டி இங்கிலாந்தில் நடத்தக் கூடாது.
என்னை பொறுத்தவரைக்கும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி போன்ற ஒரேயொரு முக்கியமான போட்டி துபாயில் நடத்தப்பட வேண்டும். பொதுவான இடம், நட்சத்திர மைதானம், உறுதியான சீதோஷ்ண நிலை, அட்டகாசமான பயிற்சி வசதிகள், விமான பயணத்தின் மையம். மைதானத்திற்கு அடுத்ததாக ஐசிசி-யின் மையம்” எனத் தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools