முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

மும்பை கிர்காவ் பகுதியில் ரிலையன்ஸ் பவுண்டேசன் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு நேற்று மதியம் மர்ம நபர் ஒருவர் போன் செய்தார். அவர் மருத்துவமனையை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்தார்.

மேலும், ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நிடா அம்பானி, ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி ஆகியோருக்கும் கொலை மிரட்டல் விடுத்தார். அதன்பின், அவர் இணைப்பை துண்டித்துவிட்டார்.
இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தினர் டி.பி. மார்க் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்பானி குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், அம்பானி குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த ராகேஷ் குமார் மிஸ்ரா என்பவரை பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் போலீசார் கைது செய்தனர். மிரட்டல் விடுக்க பயன்படுத்திய மொபைல் போனையும் போலீசார் மீட்டனர். பீகார் காவல்துறை உதவியுடன் அந்த மிரட்டல் ஆசாமியைக் கைது செய்த மும்பை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools