முகமது ஷமி, வைஷாலி உள்ளிட்ட 26 பேருக்கு அர்ஜுனா விருது

விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் 2-வது உயரிய விருதாக அர்ஜூனா விருது கருதப்படுகிறது.

சமீபத்தில் இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை தொடரில் 7 இன்னிங்சில் ஆடிய முகமது ஷமி 24 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சிறந்த பந்துவீச்சாக 57 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன்மூலம் இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற விருதை சமி தட்டிச் சென்றார்.

இதற்கிடையே, விளையாட்டு அமைச்சகத்திடம் பிசிசிஐ சிறப்பு கோரிக்கையாக முகமது ஷமியின் பெயரை அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்திருந்தது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான விளையாட்டு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது டேபிள் டென்னிஸ் வீரர்களான சிராக் சந்திரசேகர் ஷெட்டி, சாத்விக் ஜெயராஜ் ஜோடிக்கு அளிக்கப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி உள்பட 26 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே கவுதம் கம்பீர், ஹர்பஜன் சிங், வீரேந்திர சேவாக், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, ரவி சாஸ்திரி, சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports