Tamilசெய்திகள்

மீன்பிடி தொழிலில் இந்தியாவிலேயே ஐந்தாவது பெரிய மாநிலம் தமிழ்நாடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் நடைபெற்று வரும் மீனவர் நல மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

மீனவர்களுக்காக தி.மு.க. அரசு ஏராளமான திட்டங்களை செய்துள்ளது. மீனவர்களுக்கு மானிய விலையில் மண் எண்ணெய், கருணாநிதி ஆட்சி காலத்தில் வழங்கப்பட்டது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீனவர்களின் நண்பராக செயல்பட்டு வருகிறார். மீன்வளத்துறையின் பெயரை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை என மாற்றினோம். பொதுவாக அரசு நிகழ்ச்சிகளில் மீனவர் சங்கங்களை இணைத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் நாங்கள் அதிகாரிகளையும், மீனவர்களையும் இணைத்துள்ளோம்.

நாட்டுப்படகு மீனவர்களுக்கு இயந்திரம் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டை உலகோடு இணைத்தது கடல். மீன்பிடி தொழிலில் இந்தியாவிலேயே ஐந்தாவது பெரிய மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மீனவர்களின் பங்கு தவிர்க்க முடியாதது.

* கடல் மீனவர்களுக்கு சேமிப்பு மற்றும் நிவாரண திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.

* காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கான தினசரி உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

* மீனவர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தின்கீழ், 5,035 பேருக்கு இலவச பட்டா வழங்கப்படும்.

* கடல் மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரண திட்டம் நடைமுறையில் உள்ளது.

* நாட்டுப்படகு மீனவர்களுக்கு விற்பனை வரி விலக்கு அளிக்கப்பட்டு, டீசல் வழங்கப்பட்டு வருகிறது.

* மீன்பிடி தடைக்கால நிவாரணத்தொகை இனி ரூ.8,000 ஆக உயர்த்தப்படும்.

* மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்கவும், படகுகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சாத்தியம் உள்ள இடங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.