மீண்டும் ரஜினியை இயக்க ரெடியாகும் கார்த்திக் சுப்புராஜ்!

பீட்சா, ஜிகர்தண்டா படத்தின் மூலம் திரைத்துறையில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் கார்த்திக் சுப்புராஜ். அதன் பிறகு, மேயாத மான் மற்றும் மெர்குரி படங்களை தயாரித்துள்ளார். ரஜினியின் பேட்டைப்படத்தை இயக்கி டாப் இயக்குனர்களின் வரிசையில் வந்தார் கார்த்திக் சுப்புராஜ். நண்பர்களுடன் இணைந்து குறும்படம், இணைய தொடர்களை தயாரித்து வருகிறார்.

கார்த்திக் சுப்புராஜ் தற்போது அல்லி எனும் சுயாதீன படத்தை தயாரித்துள்ளார். செக்ஸி துர்கா எனும் மலையாளப்படத்தை இயக்கிய சனல் குமார் அல்லி படத்தை இயக்க உள்ளார். இப்படம் மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இருமொழிகளிலும் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்ட கார்த்திக் சுப்புராஜ். புதிய கலைஞர்களின் படைப்பை ஆதரித்ததால் தான், நான் இன்று இயக்குனராக ஆனேன்.

அதனால் தான் நானும் ஸ்டோன் பென்ஞ்ச் மூலம் பல புதிய முயற்சிகளை ஆதரித்து வருகிறேன். அல்லிப்படம் தான் தமிழில் முதன்முறையாக வெளியாகப்போகும் சுயாதீனப்படம் என்று கூறினார். இதுபோன்ற படங்கள் திரையரங்குகளில் வெளியாகாது ஆனால் படவிழாக்கள் மற்றும் விருது நிகழ்ச்சிகளில் மட்டுமே வெளியாகும் என்றார். இப்படத்தில் பாடல்கள், நகைச்சுவைகள், சண்டைக் காட்சிகள் என்று எந்த ஒரு விசயமும் இருக்காது படம் முழுவதும் மிக எதார்த்தமாக தான் இருக்கும்.

இந்த படம் எடுக்க எந்த ஒரு வியாபார நோக்கமும் இல்லை என்று கூறினார் கார்த்திக் சுப்புராஜ். ஒரு காதலனுடன் ஊரைவிட்டு செல்லும் பெண் வழியில் சந்திக்கும் பிரச்சினையே ’செக்ஸி துர்கா’ படத்தின் கதை, அதை மிகவும் ஆழமாகவும், அழகாகவும் சொல்லி இருப்பார் இயக்குனர் சனல் குமார். அதே போல, அல்லியும் ஒரு பெண்ணின் பயணத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது தான் என்று கார்த்திக் சுப்புராஜ் கூறினார். தனுசை வைத்து படம் இயக்கி வரும் இவர் அடுத்து மீண்டும் ரஜினியுடன் பணிபுரிய கதையுடன் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools