X

மீண்டும் மலையாளத்தில் நடிக்கும் நிக்கி கல்ராணி

மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் நுழைந்தவர் நிக்கி கல்ராணி. 2015-ம் ஆண்டு வெளியான டார்லிங் படத்தில் அறிமுகமான நிக்கி கல்ராணிக்கு அடுத்தடுத்து படங்கள் அமைந்தன. இந்த ஆண்டு அவர் நடிப்பில் சார்லி சாப்ளின் 2, கீ ஆகிய படங்கள் வெளியாகின.

இந்நிலையில் அவர் மீண்டும் மலையாள திரையுலகை நோக்கி கவனம் செலுத்தியுள்ளார். பிரியா வாரியரின் கண் அசைவு காட்சிகள் மூலம் பிரபலமான ‘ஒரு அடார் லவ்’ படத்தை இயக்கியவர் ஓமர் லுலு. படம் வெளியாவதற்கு முன் உண்டான அதிகபட்ச எதிர்பார்ப்புக்கு படக்குழுவினர் நியாயம் செய்யவில்லை.

படத்தின் தோல்விக்கு இயக்குநரும் நடிகர்களும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டனர். தற்போது ஓமர் லுலு ‘தமாக்கா’ என்ற பெயரில் புதிய படத்தை உருவாக்குகிறார். இதில் கதாநாயகியாக நிக்கி கல்ராணி இணைந்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த அருண்குமார் இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.