மீண்டும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சிக்கு தயாராகும் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். பாராளுமன்ற தேர்தல் காரணமாக கடந்த 3 மாதங்களாக இந்த நிகழ்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மோடி 3-வது முறையாக பதவியேற்றுள்ள நிலையில் மனதின் குரல் நிகழ்ச்சி மீண்டும் ஒலிபரப்பாகிறது. இதனை பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர், “தேர்தல் காரணமாக சில மாத இடைவெளிக்குப் பிறகு மனதின் குரல் நிகழ்ச்சி மீண்டும் தொடங்க உள்ளது என்பதைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மாத நிகழ்ச்சி வருகிற 30-ந் தேதி நடைபெறும். அனைவரும் உங்கள் யோசனைகளை பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி கடைசியா30-ந் தேதி முதல்மீண்டும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சிக கடந்த பிப்ரவரி 25-ல் ஒலிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools