பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்தது. இதையடுத்து தமிழக அரசு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி, கடந்த ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி விலை குறைந்து, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-க்கு கீழ் வந்தது. ஆனால் டீசல் விலை குறைக்கப்படவில்லை.அதன் பின்னர், பெட்ரோல், டீசல் விலை அவ்வப்போது குறைந்து கொண்டே வந்ததை பார்க்க முடிந்தது. அந்தவகையில் கடந்த 5-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99-க்கு கீழும், டீசல் கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி ரூ.94-க்கு கீழும் விற்பனை ஆனது.
தொடர்ந்து விலை குறைந்து வந்த நிலையில், தற்போது பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது. அதன்படி, டீசல் கடந்த 3 நாட்களாக விலை உயர்ந்து வருகிறது. பெட்ரோல் நேற்று விலை அதிகரித்துள்ளது.
பெட்ரோலை பொறுத்தவரையில் இன்று ஒரு லிட்டர் 99 ரூபாய் 15 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. அந்தவகையில் கடந்த 3 வாரங்களுக்கு பிறகு மீண்டும் பெட்ரோல் விலை ரூ.99-ஐ தாண்டி இருக்கிறது. இதேபோல், டீசல் லிட்டருக்கு 24 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் 94 ரூபாய் 17 காசுக்கு விற்பனை ஆனது.