மீண்டும் பயிற்சியில் ஈடுபட்ட பும்ரா – டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு?

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா, செட்டேஷ்வர் புஜாரா, ஷ்ரேயாஸ் ஐயர், விராட் கோலி, ஷுப்மன் கில், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், கே.எல். ராகுல், கே.எஸ். பாரத், முகமது ஷமி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், இஷான் கிஷன், ஜெய்தேவ் உனட்கட், சூர்யகுமார் யாதவ். ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்ட்டி வரும் 9-ம் தேதி தொடங்குகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா ஐசிசி உலகக் கோப்பையில் பங்கேற்கவில்லை. அதன் பிறகு இலங்கைக்கு எதிரான தொடரில் அவர் இடம் பெற்றிருந்தார். அதன் பிறகு திடீரென்று தொடரிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

இதேபோன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் இடம் பெறவில்லை. முதுகு வலி காரணமாக இதுவரையில் உடற்பயிற்சிகள் செய்து வந்த பும்ரா தற்போது பந்து வீச தொடங்கியிருக்கிறார். தேசிய கிரிக்கெட் அகாடமியில் வலைபயிற்சியில் பும்ரா ஈடுப்பட்டிருந்த போது அவருக்கு எந்த வித கஷ்டமும் நேரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிகளில் அவர் இடம் பெறுவார் என்று தெரிகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools