மீண்டும் பணிக்கு திரும்பினார் அபிநந்தன்!

இந்திய விமானப்படையின் போர் விமானியான சென்னை வீரர் விங் கமாண்டர் அபிநந்தன் கடந்த பிப்ரவரி 27-ந் தேதி தனது விமானம் பாகிஸ்தான் விமானப்படையால் சுடப்பட்டதால் விமானத்தில் இருந்து வெளியேறி பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டார். பின்னர் அவரை பாகிஸ்தான் கடந்த 1-ந் தேதி இந்தியாவிடம் ஒப்படைத்தது.

அவர் நாடு திரும்பியதும் டெல்லியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பல்வேறு மருத்துவ சோதனைகள், ராணுவ விளக்க நடவடிக்கைகளுக்கு பின்னர் 12 நாட்களுக்கு முன்பு 4 வாரங்கள் விடுமுறையில் வீட்டுக்கு செல்லும்படி அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. சென்னையில் உள்ள வீட்டுக்கு திரும்பிய அவருக்கு மருத்துவ குழு உடல் தகுதி பரிசோதனை நடத்தியது. பின்னர் தனது விடுமுறை முடியும் முன்பே ஸ்ரீநகரில் உள்ள தனது விமானப்படைத் தளத்துக்கு அவர் திரும்பிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools