சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படம் ‘பத்து தல’. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சிம்புவின் ‘எஸ்.டி.ஆர்.48’ படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
அதாவது, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சிம்பு “காட்டு பசியில் இருக்கிறேன். அதனை தணிக்க நானே ஒரு படத்தை இயக்கி நடிக்க வேண்டியிருக்கும். முன்னாடி இந்த மாதிரி நேரத்தில் ‘மன்மதன்’ திரைப்படத்தை எடுத்தேன்” என்ற ஒரு பகுதியை மேற்கொள் காட்டி ‘எஸ்.டி.ஆர்.48’ படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார். இதற்கு மரண வெயிட்டிங் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
