ஸ்ரீதேவிக்கு பின், பாலிவுட் ரசிகர்களின் கனவு ராணியாக திகழ்ந்தவர், மாதுரி தீட்ஷித். இவர், நடனமாடும் அழகை பார்ப்பதற்கென்றே, பாலிவுட்டில் பெரும் ரசிகர் பட்டாளம் உருவானது. திருமணத்துக்கு பின் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த அவர், சமீபகாலமாக, ஒரு சில படங்களில் நடித்தார்.
அந்த படங்கள், பெரிய அளவில் பேசப்படவில்லை. மும்பையில் நடக்கும் திரைப்பட விழாக்கள், டிவி நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்கும் அவர், திடீரென, சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட தொடங்கியுள்ளார்.
விதம் விதமான புடவைகளை அணிந்து, பல கோணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை, சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகிறார். அவற்றில் பல படங்கள், இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் உள்ளன. ‘மாதுரி, ஏதோ ஒரு பெரிய திட்டத்துடன் தான், இதைச் செய்கிறார்’ என்று கூறுகிறார்கள்.