மீண்டும் ஜெயம் ரவியுடன் இணையும் ஹிப்ஹாப் ஆதி!
அடங்கமறு படத்திற்கு பிறகு ஜெயம்ரவி நடிக்கும் புதிய படத்திற்கு இசையமைக்க ஹிப்ஹாப் ஆதி ஒப்பந்தமாகியிருக்கிறார். ஜெயம் ரவியின் 24-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பதாக முதலில் பேச்சு அடிபட்டது.
இந்த நிலையில், படத்தின் இசையமைப்பாளராக ஆதி ஒப்பந்தமாகியிருப்பதாக ஜெயம் ரவி அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். ஆதி முன்னதாக ஜெயம் ரவியின் தனிஒருவன் படத்திற்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதீப் ரங்கநாதன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.
மேலும் யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கின்றனர். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்த படத்தை ஜிவி பிலிம்ஸ் வெளியிடுகிறது.