மீண்டும் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க வேண்டும் – செளந்தர்யா விருப்பம்
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படம், வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் குடும்பத்தினருடன் ‘அண்ணாத்த’ படத்தைப் பார்த்த ரஜினியின் மகள் சௌந்தர்யா. படத்தைப் பற்றி தனது ஹூட் செயலில் போட்ட குரல் பதிவில், “படம் பார்த்துவிட்டு கண்களில் கண்ணீருடன் சிவா சாருக்கு நன்றி சொன்னேன். நீங்கள் செய்திருப்பது மேஜிக் என்பதையும் தாண்டி சொல்ல வார்த்தைகள் இல்லை. தலைவரும் – நீங்களும் மீண்டும் ஒரு படம் பண்ண வேண்டும்” என்று அவர் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.