மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகர் ரன்வீர் சிங்!

பிரபல இந்தி நடிகரான ரன்வீர் சிங், நடிகை தீபிகா படுகோனேவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக சமீபத்தில் தகவல் பரவியது. ஆனால் அதில் உண்மை இல்லை என்று நெருக்கமானவர்கள் மறுத்தனர். இதற்கிடையே ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படம் வெளியாகியும் எதிர்ப்புக்கு உள்ளானார்.

இந்நிலையில் இன்சூரன்ஸ் காலாவதியான காரை ஓட்டியதாக ரன்வீர் சிங் சர்ச்சையில் சிக்கி உள்ளார். இவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கி சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட தனது ஆடம்பர ஆஸ்டன் மார்ட்டின் சொகுசு காரை ஓட்டி வருகிறார். காரின் விலை ரூ.3 கோடியே 90 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த காரின் இன்சூரன்ஸ் காலாவதியாகி விட்டதாகவும் அதை புதுப்பிக்காமல் காரை ஓட்டும் ரன்வீர் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இணைய தளம் மூலம் ஒருவர் போலீசுக்கு புகார் தெரிவித்து உள்ளார்.

அதற்கு பதில் அளித்துள்ள மும்பை போலீசார் ”இதுகுறித்து போக்குவரத்து பிரிவு போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளோம்” என்று கூறியுள்ளனர். புகார் கூறியவரை ரன்வீர் சிங் ரசிகர்கள் வலைத்தளத்தில் கடுமையாக கண்டித்து வருகிறார்கள்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools