X

மீண்டும் கோப்ரா பட இயக்குநருடன் இணையும் நடிகர் விக்ரம்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘கோப்ரா’. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், கே.எஸ்.ரவிகுமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மேலும், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள “பொன்னியின் செல்வன்” திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து, இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் “சியான் 61” என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படங்களை தொடர்ந்து கோப்ரா படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் மீண்டும் ஒரு படம் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் அண்மையில் டிவிட்டர் ஸ்பேசில் கோப்ரா படக்குழுவினருடன் உரையாடிய விக்ரம், மீண்டும் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளேன் எனக் விக்ரம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.