மீண்டும் கார்த்திக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா
தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய்யுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். தெலுங்கில் உருவாகி பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்ட புஷ்பா படம் ராஷ்மிகாவுக்கு திருப்பு முனையாக அமைந்தது.
இவர் நடிப்பில் வெளியான ‘சீதா ராமம்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அமிதாப் பச்சனுடன் இவர் இணைந்து நடித்துள்ள ‘குட் பை’ திரைப்படம் அக்டோபர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், நடிகர் கார்த்தி இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் விரைவில் நடிக்கவுள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் இரண்டாவது வாரம் தொடங்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.