மீண்டும் காதல் சர்ச்சையில் சிக்கிய் அனுபமா!

கொடி படம் மூலம், தமிழில் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், தற்போது, மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இவர், இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராவை காதலிப்பதாக, சமீபத்தில் தகவல் வெளியானது. உடனடியாக, அனுபமா அதை மறுத்தார். இந்நிலையில், இந்தி நடிகர் ஒருவருடன், அனுபமாவுக்கு காதல் என, தகவல்கள் வெளியாகின.

இதனால், ஆத்திரம் அடைந்த அனுபமா, ”காதலிப்பதோ, திருமணம் செய்து கொள்வதோ, அவரவரின் தனிப்பட்ட விஷயம். இதில், அடுத்தவர் தலையிடுவது அநாகரிகம். என் வாழ்க்கையை தீர்மானிக்க, எனக்கு தெரியும். இது குறித்து, பிறர் கவலைப்பட வேண்டாம்,” என, கோபமாக தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools