இசையமைப்பாளர் இளையராஜா – இயக்குனர் பாரதிராஜா பல்வேறு வெற்றி படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். காலத்தால் அழியாத பல்வேறு படைப்புகளை கொடுத்த இவர்கள் இருவரும், மனக்கசப்பு காரணமாக நீண்ட நாட்களாக பேசாமல் இருந்தனர். இந்நிலையில், 8 ஆண்டுகளுக்கு பின்னர் இருவரும் சந்தித்து கொண்டனர். தேனியில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இது தொடர்பாக பாரதிராஜா டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, ”பல ஆண்டுகளுக்கு பிறகு இரு இதயங்கள் இணைந்தன. இயலும், இசையும் இணைந்தது; இதயம் என் இதயத்தை தொட்டது என் தேனியில்” என குறிப்பிட்டுள்ளார். இளையராஜாவுடன் காரில் இருப்பது போன்ற புகைப்படத்தை இயக்குனர் பாரதிராஜா சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.