சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்.
* சென்னையில் சராசரியாக 350க்கு மேல் கொரோனா பாதிப்பு இருக்கிறது.
* கொரோனா தடுப்பூசி போடுவதால் பக்கவிளைவுகள் எதுவும் வராது.
* சென்னையில் 40 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போடுவது அவசியமாக உள்ளது.
* சென்னையில் தேர்தல் பணியில் உள்ள 30 ஆயிரம் பேரில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
* லாக்டவுன் போடப்படும் என்ற தகவலில் உண்மையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.