Tamilசினிமா

மீண்டும் இயக்குநர் பாலா படத்தில் நடிகர் சூர்யா!

நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் படத்தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். இதுவரை அவர் தயாரித்த 36 வயதினிலே, பசங்க 2, 24, உறியடி 2, கடைக்குட்டி சிங்கம், பொன்மகள் வந்தாள், சூரரைப் போற்று ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

தற்போது சூர்யா தயாரிப்பில் ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’, ‘உடன்பிறப்பே’, ‘ஜெய் பீம்’, ‘ஓ மை டாக்’ ஆகிய 4 படங்கள் உருவாகி உள்ளன. இந்த 4 படங்களும் விரைவில் ஓடிடி-யில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் நடிகர் சூர்யா அடுத்ததாக தயாரிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இயக்குனர் பாலா இயக்க உள்ள படத்தை சூர்யா தயாரிக்க உள்ளாராம். இப்படத்தில் நடிகர் அதர்வா ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.