X

மீண்டும் இங்கிலாந்து கிளப் அணிகளுக்காக விளையாடும் வெய்ன் ரூனி

இங்கிலாந்து கால்பந்து அணியின் தலைசிறந்த வீரராக திகழ்ந்தவர் வெய்ன் ரூனி 2003 முதல் 2018 வரை 120 போட்டிகளில் விளையாடி 53 கோல்கள் அடித்துள்ளார். 33 வயதாகும் வெய்ன் ரூனி முதன்முறையாக தனது 16 வயதில் எவர்டன் அணிக்காக களம் இறங்கினார். 2004 வரை அந்த அணிக்காக விளையாடி அதன்பின் தலைசிறந்த கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு மாறினார். 2004-ல் இருந்து 2017 வரை சுமார் 13 வருடங்கள் மான்செஸ்டர் அணிக்காக விளையாடினார். 393 ஆட்டங்களில் 183 கோல்கள் அடித்துள்ளார்.

பின்னர் தனது அறிமுக அணியான எவர்டனுக்கு திரும்பினார். பின்னர் அமெரிக்காவில் உள்ள டிசி யுனைடெட் அணியில் விளையாடுவதற்காக அமெரிக்கா சென்றார். இந்நிலையில் மீண்டும் டெர்பி கவுன்ட்டி அணியில் விளையாடுவதற்கு மீண்டும் இங்கிலாந்து வருகிறார். அடுத்த வருடம் ஜனவரி 1-ந்தேதியில் இருந்து டெர்பி அணியின் வீரராகவும், பயிற்சியாளராகவும் பணிபுரிவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: sports news