சித்ராலயா கோபு இயக்கத்தில் முத்துராமன், தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோரமா நடிப்பில் கடந்த 1972-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘காசேதான் கடவுளடா’. தற்போது இப்படத்தை ரீமேக் செய்கின்றனர். ஆர்.கண்ணன் இயக்கும் இப்படத்தில் சிவா ஹீரோவாக நடிக்கிறார். மேலும் யோகிபாபு, ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான சிவாங்கி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடிக்க நடிகை பிரியா ஆனந்த் ஒப்பந்தமாகி உள்ளார். ஏற்கனவே வணக்கம் சென்னை மற்றும் சுமோ ஆகிய படங்களில் சிவாவுடன் இணைந்து பணியாற்றி உள்ள பிரியா ஆனந்த், தற்போது 3-வது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.