Tamilசெய்திகள்

மின் உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதிம் அதிமுக போராட்டம்

தமிழகத்தில் தி.மு.க. அரசு அமல்படுத்தி இருக்கும் மின் கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி இன்று அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட செயலாளர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே செங்கல்பட்டு கிழக்கு மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்காக பிரமாண்ட மேடை போடப்பட்டு இருந்தது.

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதில் கலந்து கொண்டு மின் கட்டண உயர்வை கண்டித்து உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின் போது மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கனிதாசம்பத், தண்டரை மனோகரன், மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், ஒன்றிய செயலாளர்கள் சம்பத்குமார், குமரவேலு, நகர செயலாளர் ரவிக்குமார், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தையடுத்து செங்கல்பட்டு டவுனில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. வாகனங்கள் பைபாஸ் சாலையில் திருப்பி விடப்பட்டன. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சென்னையில் கட்சி மாவட்டங்கள் 9 உள்ளன. இதன்படி 9 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தென் சென்னை தெற்கு மேற்கு மாவட்டம் சார்பில் எம்.ஜி.ஆர். நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் விருகை வி.என். ரவி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. உடனடியாக கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி கோஷங்கள் எழுப்பினர். ஆயிரக்கணக்கானோர் திரண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, கமலக்கண்ணன், சாமிநாதன், பகுதி செயலாளர்கள் ஏ.எம்.காமராஜ், சி.கே.முருகன், சேக்கலி, சைதை சுகுமார் மற்றும் வெற்றிவேல், எம்.ஜி.ஆர். நகர் குட்டி, வைகுண்டராஜன், இனியன், மாவட்ட, வட்ட பகுதி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம் சார்பில் தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம் அருகே மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நிர்வாகிகள் கணேசன், சீனிவாச பாலாஜி, நித்யானந்தம், வியாசை இளங்கோ, பாஸ்கர், ஜனார்த்தனன், சேவியர், லயன் ஜி.குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். வடசென்னை மேற்கு மாவட்டம் சார்பில் செம்பியம் மின்சார அலுவலகம் அருகே மாவட்ட செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ் பாபு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் திருமங்கலம் மோகன், கோகுல், சாரதி, சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். வடசென்னை தெற்கு மேற்கு மாவட்டம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா தலைமை தாங்கினார். ராயபுரம் மனோ முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் வடசென்னை தெற்கு மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் துறைமுகம் எம். பயாஸ், ஆவின் அருள் வேல், எம். கண்ணன், எம்.சரவணன், எம்.பத்மநாபன், கே. பாலசுப்பிரமணியம், வெற்றிலை மாரிமுத்து, சந்தான கிருஷ்ணன், அருள்வேல், கண்ணன், சரவணன், சுரேஷ்பாபு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தென்சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம் சார்பில் தி.நகரில் மாவட்ட செயலாளர் தி.நகர் சத்யா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா கலந்து கொண்டார். தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம் சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கலந்து கொண்டார்.

மாவட்ட செயலாளர் ஆதி ராஜாராம், இலக்கிய அணி இணை செயலாளர் டி.சிவராஜ், எம்.கே.சிவா, புஷ்பா நகர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டம் சார்பில் பட்டாளத்தில் மாவட்ட செயலாளர் டி.ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை புறநகர் மாவட்டம் சார்பில் சோழிங்கநல்லூரில் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரும்பாக்கம் ராஜசேகர் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். தென்சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் வேளச்சேரி அசோக் தலைமையில் அடையார் டெலிபோன் எக்சேஞ்ச் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவள்ளூர் மத்திய மாவட்டம் சார்பில் போரூர் காரம்பாக்கத்தில் மாவட்ட செயலாளர் பெஞ்சமின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட துணைச் செயலாளர் கமாண்டோ பாஸ்கர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தலைமையில் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் தலைமையில் பவானி அந்தியூர் ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ. மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மின் கட்டண உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். திருப்பூரில் குமரன் சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் உள்பட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். உடுமலையில் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மாவட்ட முழுவதும் இருந்து ஏராளமான அ.தி.மு.கவினர் கலந்து கொண்டனர். இதேபோல் தென்காசி தெற்கு, வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர்கள் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் தென்காசி புதிய பஸ்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமையில் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகிலும் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையிலும் ஆர்பாட்டங்கள் நடைபெற்றது.