தமிழகத்தில் மின்னணுவியல் துறைக்கான புதிய தொழில் உற்பத்தி கொள்கையின் விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது. அதில், கூறியிருப்பதாவது:-
* மின்னணு துறையில் முதலீடு செய்வோருக்கு 5 ஆண்டுகளுக்கு மின்சார வரி விலக்கு அளிக்கப்படும்.
* நிதி நிறுவனங்களில் இருந்து பெறப்படும் கால கடன்களுக்கு அதிகபட்சமாக 5% வரை வட்டி மானியம் வழங்கப்படும்.
* மின்னணுவியல் துறையில் முதலீடு செய்ய விரும்பினால் முதலீட்டுத்தொகையில் 30% வரை மூலதன மானியம் வழங்கப்படும்.
* 2025-ம் ஆண்டுக்குள் தமிழகத்தின் மின்னணு துறையின் உற்பத்தியை 100 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* மின்னணு பழுது பார்க்கும் பூங்காங்கள் மற்றும் மின் கழிவு மேலாண்மைக்கான வசதிகள் அமைக்கப்படும்.
* 2024-ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் நபர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.