மின்னணு தகவல் பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
செப்டம்பர் மாதம் துறை செயலாளர்களுடனான கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அனைத்துத் துறைகளின் திட்டங்கள் குறித்த தகவல்களை ஆன்லைன் தகவல் பலகையை ஏற்படுத்தி, அதன் மூலம் நான் தினசரி பார்க்கப் போகிறேன். என் அறையிலேயே பார்க்கும் வகையில் ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
வாக்குறுதிகள், வெளியிட்ட அறிவிப்புகள், பணிகளின் முன்னேற்றம் குறித்த தவகல்கள் அதில் இடம்பெறும். வாரம் ஒருமுறை இதை வைத்து ஆய்வு செய்யப்போகிறேன்’’ எனத் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, முதல்வருக்கான மின்னணு தகவல் பலகை (டேஷ்போர்டு) தயாரிக்கும் பணி தொடங்கியது. ஒருங்கிணைப்பாளராக தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆலோசகராக உள்ள டேவிதார் நியமிக்கப்பட்டார். வழக்கமான தகவல்கள் போல் அல்லாமல் ஒவ்வொரு துறைதோறும், திட்டங்கள்தோறும் நிகழ்நிலை புள்ளிவிவரங்கள் கோரப்பட்டு, அவை ஒருங்கிணைக்கப்பட்டன.
இதில், முதல்வர் விரும்பும் துறையின் தகவல்களை உடனடியாகப் பார்க்க முடியும். இந்த மின்னணு தகவல் பலகைக்கான மென்பொருள் உருவாக்கும் பணியில் 50-க்கும் மேற்பட்ட மென்பொறியாளர்கள் நியமிக்கப்பட்டு, தற்போது பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்த தகவல் பலகையை இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இயக்கி வைத்து பார்வையிடுகிறார்.