மிகவும் சக்தி வாய்ந்தது ஓட்டர் ஐடி – பிரதமர் மோடி

பிரதமர் மோடி இன்று தனது சொந்த மாநிலமான குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

என் தாய் வீடான குஜராத்தில் எனது கடமையை நிறைவேற்ற வாய்ப்பு கிடைத்தன் மூலம் நான் அதிர்ஷ்டசாலி ஆனேன். கும்ப மேளாவில் புனித நீராடினால் தூய்மை அடைவதைப்போல, ஜனநாயக திருவிழாவில் வாக்கை பதிவு செய்தபின் வாக்காளர் தூய்மையானவராக உணரலாம். தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்கவேண்டும்.

பயங்கரவாதத்தின் ஆயுதம் ஐஇடி(வெடிகுண்டு), ஜனநாயகத்திற்கு வலிமை சேர்ப்பது ஓட்டர் ஐடி (வாக்காளர் அடையாள அட்டை). ஐஇடி-யை விட மிகவும் சக்தி வாய்ந்தது ஓட்டர் ஐடி. எனவே நாம் நமது ஓட்டர் ஐடியின் வலிமையை புரிந்துகொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools