‘மாஸ்டர்’ விஜயால் மட்டும் தான் சிறப்பாக வந்தது – விஜய் சேதுபதி

தனியார் நிறுவனம் தொடங்கிய சர்வீஸ் சென்டர் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய்சேதுபதி, மாஸ்டர் படம் மூலம் மீண்டும் திரையரங்குக்கு மக்கள் வந்திருக்கிறார்கள். விஜய், லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித்குமார், மக்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. இரண்டாவதாக ‘800’ படத்தைப் பற்றிய கேள்வியை செய்தியாளர்கள் முன்வைக்க, ”800′ பட பிரச்னை முடிந்துவிட்டது. அதை மீண்டும் கிளப்பாதீர்கள்.’ என்றார்.

மாஸ்டர் என்றாலே விஜய்சேதுபதி படம் என்று ஒரு சிலர் கூறுகிறார்களே என்ற கேள்விக்கு, ‘இந்தக் கேள்வியே அவசியமில்லாதது. விஜய்யால் மட்டும் தான் அந்தப் படம் இவ்வளவு சிறப்பாக வந்திருக்கிறது.’ என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools