Tamilசினிமா

’மாஸ்டர்’ பட கூட்டணியால் உருவான ‘வலிமை’ பட பாடல்

அஜித் – எச்.வினோத் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. இப்படத்தின் முதல் பாடல் இன்று இரவு வெளியிடப்பட உள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் பாடலை அனிருத் பாடி உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பாடலுக்கு ‘வேற மாரி’ என பெயரிடப்பட்டு உள்ளதாகவும், விக்னேஷ் சிவன் இதன் பாடல் வரிகளை எழுதி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யுவன் சங்கர் ராஜா – அனிருத் – விக்னேஷ் சிவன் ஆகிய மூவரும் இதற்கு முன்னர் விஜய்யின் மாஸ்டர் படத்துக்காக இணைந்து பணியாற்றினர். அப்படத்தில் இடம்பெற்ற ‘அந்த கண்ண பாத்தாக்கா’ எனும் பாடல் இவர்கள் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது அதே கூட்டணி, வலிமை படத்துக்காக மீண்டும் இணைந்துள்ளதால், ‘வேற மாரி’ பாடல் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.