X

‘மாஸ்டர்’ படத்தின் டிரைலர் ஜனவரி 1 ஆம் தேதி ரிலீஸ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் மாளவிகா மோகன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உட்பட ஏராளமானோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்க்ரீன் லலித் வெளியிடுகிறார். மாஸ்டர் படத்தின் டீசர் கடந்த தீபாவளி அன்று வெளியாகி 4.3 கோடி பார்வையாளர்களுடன் தொடர்ந்து வைரலாகி வருகிறது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் டிரெய்லரை வரும் ஜனவரி 1ந் தேதி அதிகாலை ஒரு மணிக்கு படக்குழுவினர் வெளியிடப் போவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் டீசர் சில மணி நேரங்களில் கோடிக்கணக்கானோர் பார்த்து வைரலான நிலையில், தற்போது டிரெய்லருக்கு விஜயின் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.