‘மாஸ்டர்’ படக்குழுவின் புதிய அறிவிப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாஸ்டர்’. இதில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, வி.ஜே.ரம்யா, கௌரி கிஷண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படம் ஏப்ரல் 9-ம் தேதி வெளியீடு என்று திட்டமிடப்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கியமான திரையரங்குகளிலும் பெரிய அளவிலான விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இன்னும் தணிக்கையாகவில்லை என்பதால் வெளியீட்டுத் தேதியை அதிகாரபூர்வமாக படக்குழு தெரிவிக்காமல் உள்ளது.

இன்னும் படப்பிடிப்பு முழுமையாக முடியவில்லை என்பதால், இந்தப் படம் ஏப்ரல் 9-ம் தேதி வெளியாக வாய்ப்பில்லை என்று தகவல் வெளியானது. இதனால், விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் சிறு குழப்பம் உருவானது. இது தொடர்பாகப் படக்குழுவினரிடம் விசாரித்தபோது, 95% படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது என்றும், டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்கள். மேலும், ஏப்ரல் 9-ம் தேதி வெளியீட்டில் எந்தவித மாற்றமும் இல்லை. திட்டமிட்டபடி வெளியாகும் எனவும் குறிப்பிட்டார்கள்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools