X

‘மாஸ்டர்’ தீபாவளிக்கு ரிலீஸாகாது – தயாரிப்பாளர் அறிவிப்பு

விஜய் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றது. கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால் மாஸ்டர் திரைப்படம் வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது தமிழக அரசு 10-ம் தேதி முதல் திரையரங்குகளைத் திறந்து கொள்ளலாம் என்று அனுமதி அளித்திருக்கும் நிலையில் தீபாவளிக்கு மாஸ்டர் வெளியாகுமா என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியது.

இது குறித்து தயாரிப்பாளர் லலித்குமார் அளித்த பேட்டியில், தீபாவளிக்கு மாஸ்டர் திரைப்படம் வெளியாக வாய்ப்பில்லை என்றும், பொங்கலுக்கு படம் வெளியாகுமா இல்லையா என்பதை தற்போது சொல்ல முடியாது என்றும் கூறியுள்ளார்.

அரசின் உத்தரவு படி நவம்பர் 10-ம் தேதி முதல் 50% இருக்கைகளுடன் படம் திரையிடப்பட்டால் மாஸ்டர் போன்ற பெரிய பட்ஜெட் படங்களில் லாபத்தை எடுக்க முடியாது என்ற காரணத்தினால் தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது.