‘மாவீரன்’ படத்தின் ஆக்ஷன் காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளது
‘டாக்டர்’, ‘டான்’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து ‘மண்டேலா’ பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் படம் மாவீரன். இப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர்.
இதற்கான அறிவிப்பை படக்குழு முன்னதாகவே வெளியிட்டது. இந்நிலையில், இந்த படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘மாவீரன்’ திரைப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும், சிவகார்த்திகேயன் மற்றும் மிஷ்கின் இருவருக்குமான காட்சிகள் விரைவில் படமாக்கப்படவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.