ரஜினியின் பேட்ட படம் மூலம் தமிழில் அறிமுகமான மாளவிகா மோகனன் மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார். சமீபத்தில் நடிகை டாப்சி, இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆகியோர் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தியதை மாளவிகா மோகனன் கண்டித்தார்.
வருமானவரி சோதனை நடந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து நாம் பாசிசத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம் என்ற பதிவையும் வெளியிட்டார். டாப்சியும், அனுராக் காஷ்யப்பும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்ததால் வருமான வரி சோதனை நடந்துள்ளது என்று சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் பரவி வருகிறது. அதை தொடர்ந்து வருமான வரிதுறையின் செயலை மாளவிகா மோகனன் சாடி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாளவிகா மோகனன் கருத்துக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நடிகர் விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தபோது அமைதியாக இருந்தது ஏன்? அப்போதும் இதுபோன்ற பதிவை வெளியிட்டு கண்டித்து இருக்கலாமே என்று மாளவிகாவை ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.