X

மாலத்தீவு சென்ற விராட் கோலிக்கு கொரோனா பாதிப்பு!

இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் வருகிற 1-ந் தேதி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் 5-வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்த டெஸ்டில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் இங்கிலாந்து புறப்பட்டு சென்றனர். தென் ஆப்பிரிக்கா தொடர் முடிந்த நிலையில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நேற்று இந்திய அணியுடன் இணைந்துள்ளார்.

இதற்கிடையில் ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு, இந்திய கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் விடுமுறையில் தங்களது குடும்பத்துடன் மாலத்தீவு சென்றுள்ளனர். விடுமுறைக்கு பிறகு திரும்பிய விராட் கோலிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அவர் தப்போது குணமடைந்துவிட்டார் என்றும் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியாகி உள்ளது.