மாற்றத்திற்கான திருவிழாவை குஜராத்தில் கொண்டாடுவோம் – ராகுல் காந்தி பேச்சு

குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதிகள் என இரு கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. குஜராத் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அங்கு ஆளும் பா.ஜ.க. மற்றும் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் குஜராத்துக்கு சென்ற பிரதமர் மோடி தனது சொந்த ஊரில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். ஆம் ஆத்மி கட்சி ஆதலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், பா.ஜ.க.வின் இரட்டை என்ஜின் என்ற வஞ்சகத்தில் இருந்து குஜராத் மக்களை காப்பாற்றுவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பா.ஜ.க.வின் இரட்டை என்ஜின் என்ற வஞ்சகத்தில் இருந்து உங்களை காப்பாற்றுவோம்.

மாற்றத்திற்கான திருவிழாவை குஜராத்தில் கொண்டாடுவோம். எரிவாயு சிலிண்டர் விலை ரூ.500, 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள், ரூ. 3 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி போன்ற காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என பதிவிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools