மாற்றத்தின் புயல் நாடு முழுவதும் வீசுகிறது – ராகுல் காந்தி பதிவு

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

இன்று 5-வது கட்ட வாக்குப்பதிவு. அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க மக்கள் எழுந்து நின்று பா.ஜ.க.வை தோற்கடிக்கிறார்கள் என்பது முதல் 4 கட்டங்களில் தெளிவாகி விட்டது. வெறுப்பு அரசியலால் சலித்துப்போன இந்த நாடு இப்போது தனது பிரச்சனைகளில் வாக்களித்து வருகிறது.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, கடனில் இருந்து விடுதலை உள்பட பல்வேறு பிரச்சனைகளுக்காக வாக்களிக்கிறார்கள். இந்த தேர்தலில் இந்திய மக்கள் ஒன்றிணைந்து போராடுகிறார்கள், மாற்றத்தின் புயல் நாடு முழுவதும் வீசுகிறது.

அமேதி மற்றும் ரேபரேலி உள்பட நாடு முழுவதும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் குடும்பங்களின் செழிப்புக்காகவும், உங்கள் சொந்த உரிமைகளுக்காகவும், இந்தியாவின் முன்னேற்றத்திற்காகவும் அதிக எண்ணிக்கையில் வாக்களியுங்கள்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools