X

மார்க் ஆண்டனி வெற்றி – விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குநர் வெங்கட் பிரபு

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் இன்று (செப்டம்பர் 15) திரையரங்குகளில் வெளியானது.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் வெங்கட் பிரபு சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “மார்க் ஆண்டனி படம் குறித்து நல்ல செய்திகள் வருகிறது. சகோதரர் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா சாரை நினைத்து சூப்பர்.. டூப்பர்.. ஹேப்பியாக இருக்கிறது. படக்குழுவிற்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

Tags: tamil cinema