X

மாயமாக மறையும் வாகனங்கள்! – வீடியோவால் பெரும் குழப்பத்தில் நெட்டிசன்கள்

‘ஆப்டிக்கல் இல்யூஷன்’ எனும் மாய தோற்றத்தை உண்டாக்கும் தொழில்நுட்பம் இன்று உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதை நிருபிக்கும் விதமாக பல்வேறு வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாவது வழக்கமான ஒன்றாகி விட்டது.

தற்போது நெட்டிசன்களிடம் ட்ரெண்டாகி வரும் ஒரு ஆப்டிக்கல் இல்யூஷனும் அப்படிதான் உள்ளது. இந்த வீடியோவில், நதிக்கு மேலே உள்ள பாலத்தில் டிராபிக் ஏற்படுகிறது.

உடனே பாலத்தில் நிற்கும் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து இடது புறம் திரும்புகிறது. இந்த வாகனங்கள் திடீரென்று மாயமாகின்றன.

இந்த வீடியோவை திரும்ப திரும்ப பார்த்தாலும் அதற்கான விடை கிடைக்கவில்லை. இதனால், பல நெட்டிசன்கள் இந்த வீடியோவை பகிர்ந்து, ‘என்ன நடக்கிறது?’ போன்று வியப்புடன் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த வீடியோவை டுவிட்டரில் பதிவிட்ட டேனியல் எனும் லண்டனைச் சேர்ந்தவர், ‘நீங்கள் நினைப்பது சரிதான். டிராஃபிக் காணாமல் போகிறது’ என பதிவிட்டு அனைவரின் கண்களையே நம்ப முடியாத அளவிற்கு செய்துவிட்டார்.

இந்த வீடியோவை ஒருவர் 63,000 முறை திரும்ப திரும்ப பார்த்துள்ளார். இருப்பினும் இந்த நுட்பம் என்ன என்பதை கண்டுபிடிக்க முடியாமல் அவர் வெறுத்துப் போய் கமெண்ட் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.