மாமாவுக்கு தேசிய விருதை சமர்ப்பித்த கீர்த்தி சுரேஷ்!
மகாநதி படத்தில் மிகச் சிறப்பாக நடித்ததற்காக, தேசிய விருது பெற்றிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இதுபற்றி இன்ஸ்டாகிராமில் அவர் கூறுகையில், மதிப்புமிக்க விருதை பெற்ற அந்த நிமிடத்தை என்னால் மறக்க முடியாது. இந்த நிலைக்கு நான் எப்படி சென்றேன் என்பதை நினைக்க நினைக்க ஆச்சரியமாக இருக்கிறது. தற்போதைய என் உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இருந்தாலும், முயற்சிக்கிறேன்.
இது ஒரு கனவு மட்டுமல்ல; என்னை தொடர்ந்து கொண்டே வந்த ஒரு குறிக்கோளாகவும் நினைக்கிறேன். என்னுடைய மறக்க முடியாத இந்த பயணத்தில் அங்கமாக இருந்த ஒவ்வொருவருக்கும் என்னுடைய நன்றி. தேசிய விருதை என்னுடைய அம்மா மேனகாவுக்கு சமர்ப்பிக்கிறேன்.
எனக்கு ஒரு உந்து சக்தியாக இருந்து செயல்படுவது என்னுடைய மாமா, நடிகர் கோவிந்து தான். மகாநதியில் நடிக்கலாமா… வேண்டாமா என்ற இரு எண்ணம் எனக்குள் இருந்தது. ஆனால், அதில் கட்டாயம் நடித்து தான் ஆக வேண்டும் என, என்னை தள்ளியவர் அவர் தான். அவருடைய பார்வை வித்தியாசமானது. வேறு யாரும் சிந்திக்க முடியாதது. சாவித்திரி ஆசீர்வாதத்தால் தான், அவருடைய கேரக்டரில் என்னால் நடிக்க முடிந்தது. சாவித்திரிக்கு எப்போதும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.