Tamilசெய்திகள்

மாமதுரை விழா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மதுரையில் இன்று முதல் 4 நாட்கள் நடைபெறும் “மாமதுரை விழா”வை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து உரையாற்றிய அவர் கூறியதாவது:

* இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்று மதுரை.

* 1866-ம் ஆண்டே நகராட்சியான ஊர் மதுரை, சென்னைக்கு அடுத்தபடியாக மாநகராட்சி ஆன ஊர் மதுரை.

* சென்னைக்கு அடுத்த 2-வது மாநகராட்சியாக 1971-ல் மதுரையை மாற்றினார் அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி.

* திராவி மாடல் ஆட்சி மதுரைக்கு 2 அமைச்சர்களை கொடுத்துள்ளது.

* அனைவருக்கும் அவரவர் ஊர் போற்றுதலுக்குரியது.

* தவறு செய்தவர் மன்னனே ஆனாலும் கேள்வி கேட்ட கண்ணகியின் மண் இது.

* மாமதுரை விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

* சிலப்பதிகாரத்தில் கூறப்பட்ட இந்திர விழாவைப்போல இந்த விழா நடைபெறும்.

* வரலாற்றை போற்றுவோம், வைகையை போற்றுவோம், மதுரையை போற்றுவோம் என விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

* பொழுதுபோக்கு விழாவாக இல்லாமல் பண்பாட்டு விழாவாக நடத்தப்படுகிறது என்று கூறினார்.