Tamilவிளையாட்டு

மான்ட்கார்லோ டென்னிஸ் – அரையிறுதியில் ரபேல் நடால் தோல்வி

மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் உலகின் இரண்டாம் நிலை வீரரும், 11 முறை சாம்பியனுமான ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபேல் நடாலும், உலகின் 18-ம் நிலை வீரரான இத்தாலி நாட்டை சேர்ந்த பாபியோ போக்னினிய்ம் மோதினர்.

இந்த போட்டியில் 6-4, 6-2 என்ற நேர் செட்களில் ரபேல் நடால் தோற்று போட்டியில் இருந்து வெளியேறினார்.

இதேபோல் நேற்று நடந்த மற்றொரு அரையிறுதி போட்டியில் செர்பிய வீரர் துசான் லாஜோவிச் 7-5, 6-1 என்ற நேர் செட்டில் டேனில் மெட்விடெவை (ரஷியா) வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *