Tamilசெய்திகள்

மாநிலங்களில் சுயாட்சியை பறிக்கிறது பா.ஜ.க – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா பாட்காஸ்டின் 3வது ஆடியோ இன்று வெளியானது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

இந்தியா என்பது கூட்டாட்சி தன்மை கொண்ட நாடு. பல்வேறு அழகிய மலர்கள் நிறைந்த அற்புதமான பூந்தோட்டம். அதை சிதைக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது.

ஆளுநர் மாளிகைகள் மூலம் மாநில சுயாட்சியை பறிக்கிறது பா.ஜ.க. முதலமைச்சராக மாநில உரிமை பற்றி பேசிய மோடி, பிரதமராகி மாநில உரிமைகளை பறிக்கிறார். மாநில அரசின் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசின் வாசலில் காத்திருக்கும் நிலையை உருவாக்கி விட்டார் மோடி.

சி.ஏ.ஜி அறிக்கையை வெளியிட்ட அதிகாரிகளை கூண்டோடு மாற்றியது ஏன்? மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி இதுதான் உண்மையான ஜனநாயகம். தி.மு.க.வின் முக்கிய கொள்கைகளில் ஒன்று மாநில சுயாட்சி.

மாநிலங்களை ஒழிக்கவேண்டும் என பா.ஜ.க. அரசு நினைக்கிறது. மாநில சுயாட்சி கொள்கை வெல்லும் வகையில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும். இந்தியாவை இந்தியா கூட்டணியிடம் ஒப்படைக்க வேண்டும்.

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் என தெரிவித்தார்.