மாநிலங்களிடம் 21.65 கோடி தடுப்பூசிகள் கையிறுப்பு – சுகாதார அமைச்சகம் தகவல்

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக அமல்படுத்தி வருகின்றன. வீடுகள்தோறும் தடுப்பூசி திட்டத்தை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதற்கு மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு இதுவரை 131 கோடியே 62 லட்சத்து 3 ஆயிரத்து 540 தடுப்பூசிகளை வினியோகம் செய்துள்ளது.

இவற்றில் பயன்படுத்தியது போக மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் 21 கோடியே 65 லட்சத்து 9 ஆயிரத்து 916 தடுப்பூசிகள் கையிருப்பாக உள்ளன.

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools