வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், மாநாடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா, அப்படம் குறித்து கூறியதாவது: “மாநாடு படத்தில் நான் வில்லனாக நடிக்கிறேன். இந்திய சினிமாவில் இதுவரை வந்திராத புதுமையான படம் மாநாடு. அதனால், இப்படம் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.