மாநாடு படத்தில் நடிக்கும் பாரதிராஜா!

சிம்பு நடித்து கடந்த வருடம் செக்க சிவந்த வானம், காற்றின் மொழி, வந்தா ராஜாவாதான் வருவேன் ஆகிய படங்கள் வெளியாகின. அதன்பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் ‘மாநாடு’ படத்தில் அவர் நடிப்பதாக அறிவித்து பட வேலைகளை தொடங்கிய பிறகு திடீரென்று படம் நின்று போனது.

சிம்பு நடிக்க வராமல் தாமதம் செய்ததால் படத்தை நிறுத்தியதாக கூறினர். வேறு நடிகரை வைத்து மாநாடு பட வேலைகளை தொடங்கவும் திட்டமிட்டனர். இந்த பிரச்சினையில் தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. மாநாடு படத்தில் சிம்பு நடித்து கொடுப்பார் என்று அப்போது உறுதி அளிக்கப்பட்டது.

இதற்கான உறுதிமொழி பத்திரத்திலும் சிம்பு கையெழுத்திட்டு கொடுத்தார். இதையடுத்து மாநாடு பட வேலைகள் தொடங்கி உள்ளன. கதாநாயகியாக நடிக்க கல்யாணி பிரியதர்ஷன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர் ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்துள்ளார்.

மாநாடு படத்தில் நடிக்க டைரக்டர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளனர். இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள். வில்லன் வேடத்தில் நடிக்க சுதீப்பிடம் பேசி வருகிறார்கள். மேலும் சில நடிகர் நடிகைகளும் நடிக்க உள்ளனர். படத்தில் நடிப்பவர்கள் பட்டியல் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools