‘மாநாடு’ படத்தில் இருந்து பாரதிராஜா விலகல்
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த பாரதிராஜா, தற்போது விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வரும் பாரதிராஜா, மாநாடு படத்திற்கு தேதி ஒதுக்க முடியாததன் காரணமாக, அப்படத்தில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் படக்குழுவினர் தரப்பில் இதுகுறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.