வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவையொட்டி தெற்கு ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிது. கூட்ட நெரிசலை குறைப்பதற்காக தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு (எண்.06003) ரெயில் விடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு கட்டண ரெயில் தாம்பரத்தில் இருந்து 28-ந் தேதி இரவு 9 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணிக்கு அதிகாலை 4.30 மணிக்கு போய் சேருகிறது.
இதே போல் வேளாங்கண்ணியில் இருந்து 29-ந் தேதி இரவு 7.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்.06004) அதிகாலை 3.15 மணிக்கு தாம்பரம் வந்து சேரும். இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இதே போல் தாம்பரத்தில் இருந்து கொச்சுவேலிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. நாளை (19-ந் தேதி) மாலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் 20-ந் தேதி காலை 8 மணிக்கு சென்றடையும். 20-ந் தேதி கொச்சு வேலியில் புறப்பட்டு 21-ந் தேதி தாம்பரம் வந்து சேரும். இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.