வடசென்னை பகுதி மக்களின் வசதிக்காகவே விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த 160 தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்கள் மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் மாதவரத்தில் இருந்து பேருந்து சேவையை அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
* கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இன்று முதல் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
* கோயம்பேட்டில் இயக்கப்பட்ட தென் மாவட்ட பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும்.
* வடசென்னை மக்களின் சிரமத்தை தவிர்க்க மாதவரத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.
* மாதவரத்தில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் 160 பேருந்துகள் இயக்கப்படும்.
* 80 சதவீத பேருந்துகள் கிளாம்பாக்கத்திலும், 20 சதவீத பேருந்துகள் மாதவரத்தில் இருந்தும் இயக்கப்படும்.
* 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேர கால இடைவெளியில் மாதவரத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்தார்.